2023 ஆசிய விளையாட்டுப் போட்டி.. இந்திய அணிக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் நடைபெற உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கீழ் வராததால் இது சர்வதேச கிரிக்கெட்டாக அங்கீகரிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருவதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக தவானையும், பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனையும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 Asian games dhavan captain and VVS Laxman coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->