மகளிர் ஐபிஎல்.. மும்பை அபார பந்துவீச்சு.. 132 ரன்கள் இலக்கு.. சாம்பியன் பட்டம் யாருக்கு.?
2023 WPL final Delhi Capitals target of 132 runs against Mumbai Indians
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின.
அதன்படி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதின.
இதில், எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -யுபி வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து முதலாவது மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓவர்களில் 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே - ராதா யாதவ் 24 பந்துகளில் 52 ரன்கள் குவித்தனர். இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய இஸ் யங் மற்றும் ஹெய்லி மாத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளும், மெலி கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முதலாவது மகளிர் ஐபிஎல் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பது தெரிந்துவிடும்.
English Summary
2023 WPL final Delhi Capitals target of 132 runs against Mumbai Indians