2025 இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள்! முழு விவரம்!
2025 indian cricket team series
இன்று பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் போட்டிகள் குறித்த அட்டவனை வெளியாகியுள்ளது. அதன்படி,
ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்த ஜனவரி மாதத்திலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது.
ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
பின்னர், வங்காளதேசத்தில் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
அக்டோபரில் ஆசிய கோப்பை,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அனைத்து வடிவிலான தொடர்கள் மற்றும் ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் ஆகியவையும் இந்திய அணியின் திட்டங்களில் உள்ளன.
இந்த ஆண்டில் இந்திய அணி 18 இருபது ஓவர், 10 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் பல ஆட்டங்கள் இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றம் தான்.
2024-ம் ஆண்டினை தோல்வியுடன் (ஆஸ்திரேலியாவிடம் 4 வது டெஸ்ட் ஆட்டம்) முடித்துள்ள இந்திய அணிக்கு, இன்று பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக அமைய வேண்டும்!
English Summary
2025 indian cricket team series