செஸ் ஒலிம்பியாட் போட்டி : இந்திய அணி அபாரம்.. முதல் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி.!
22th Chess Olympiad india won 1st round
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் அமைந்துள்ள போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய ஆண்கள் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது .இதில் 4-0என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா ஆண்கள் அணியின் 'பி' பிரிவு ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா ஆண்கள் அணியின் 'சி' பிரிவு தெற்கு சூடானை எதிர்த்து விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
முதல் சுற்றில் இந்திய மகளிர் 'ஏ' பிரிவு அணி தஜிகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதில், 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா மகளிர் அணியின் 'பி' பிரிவு வேல்ஸை எதிர்த்து விளையாடியது .இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா மகளிர் அணியின் 'சி' பிரிவு ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில், 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
English Summary
22th Chess Olympiad india won 1st round