4வது ஒருநாள் தொடர் - இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்!
4th one day series england vs australia clash today
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது . மேலும் இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது .
தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம் காட்ட உள்ளது. அதேபோல இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருந்த போதிலும் ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக உள்ளனர்.
English Summary
4th one day series england vs australia clash today