ரஞ்சி கோப்பை : முதல் போட்டியிலேயே சதம்.. சச்சின் டெண்டுல்கரைப் போல அர்ஜுன் டெண்டுல்கரும் சாதனை.!
Arjun Tendulkar debut Ranji trophy century
ரஞ்சி ட்ராபியில் முதல் போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கரைப் போல அர்ஜுன் டெண்டுல்கரும் சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் (வயது 22) இடது கை வேகப்பந்து வீச்சாளராவார். கடந்த 2020-21 சீசனில் மும்பை அணியின் சார்பாக விளையாடிய இவருக்கு ஹரியானா மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த சீசனில் மும்பையில் இருந்து விலகி கோவா அணியில் இணைந்து அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ரஞ்சி ட்ராபியில் நேற்று முதல் லீக் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் - கோவா அணிகள் விளையாடி வருகிறது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் கோவா அணி 2ம் நாளில் தற்போது வரை 140 ஓவர்களில் 5 விழக்கெட் இழப்பிற்கு 410 ரன்களுடன் விளையாடி வருகிறது. இதில் அந்த அணியில் பிரபுதேசாய் 172, ரன்களுடனும், அர்ஜுன் டெண்டுல்கர் 112 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையை போலவே தனது முதல் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்துள்ளார். ரஞ்சி ட்ராபியில் சச்சின் டெண்டுல்கர் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி முதல் போட்டியிலேயே சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arjun Tendulkar debut Ranji trophy century