கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் குறித்து., ரவிச்சந்திரன் அஸ்வின் பரபரப்பு டிவிட்.!
ASHWIN SAY ABOUT VIRAT
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலகிய விராட்கோலி, நேற்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.
அணியை வழி நடத்தக்கூடிய கேப்டனாக என்னை தேர்ந்தெடுத்த மகேந்திர சிங் டோனிக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், வீரர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது,
"கேப்டனாக எப்போதும் தங்களின் சாதனைகள், வெற்றிகள், நீங்கள் அணியை நிர்வகித்த விதம் குறித்து எப்போதும் நீங்கள் பேசப்படுவீர்கள். ஒரு அடையாளமாக நீங்கள் இருப்பீர்கள்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தலைமையில் பெற்ற வெற்றிகள் குறித்து இனி வரும் காலம் பேசும்.
போட்டியில் வெற்றிகள் என்பது ஒரு முடிவுகளாக இருக்கலாம். ஆனால் வெற்றியை அறுவடை செய்வதற்கு முன் விதைகளை நேர்த்தியாக எப்போதும் விதைக்கவேண்டும். அந்த விதைகளை நீங்கள் நேர்த்தியாக விதைத்து, ஒரு தரத்தினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த எதிர்பார்ப்பு அடுத்து கேப்டன் பதவிக்கு வரக்கூடியவர்கள் இடமும் எதிர்பார்ப்பது சந்தேகமில்லை. அடுத்த கேப்டனாக வருபவருக்கு உங்களின் சாதனைகள் பெரிய தலைவலியாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் நாம் ஒரு இடத்தை விட்டு வெளியேறி ஆகத்தான் வேண்டும். ஆனால் அந்த இடத்தை அங்கிருந்து எதிர்காலம் தான் மேலே கொண்டு செல்லும்" என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.