வெறும் 150 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆன இந்திய அணி!
AUSvIND Border Gavaskar Trophy
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 8 ரன்களுடன் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து டக்அவுட் ஆனார். பின்னர் கே.எல். ராகுலுடன், விராட் கோலி சேர்ந்து சில நிமிடங்கள் ஆடினார்.
பின்னர் விராட் கோலியும் பவுன்சர் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து, கே.எல். ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழக்க, ஜூரல், வாஷிங்டன் சுந்தர் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் ரெட்டி அணியை முன்னேற்ற, இதில் ரிஷப் பண்ட் 37 ரன்களுடன், நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிச்சல் மார்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவின் ஸ்கோர் கார்டு
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 0
கே.எல்.ராகுல் - 26
தேவ்தத் படிக்கல் - 0
விராட் கோலி - 5
ரிஷப் பந்த் - 37
துருவ் ஜுரெல் - 11
வாஷிங்டன் சுந்தர் - 4
நிதீஷ் ரெட்டி - 41
ஹர்ஷித் ராணா - 7
ஜஸ்ப்ரீத் பும்ரா - 8
முகமது சிராஜ் - 0*
English Summary
AUSvIND Border Gavaskar Trophy