பரோடா பெண்கள் கிரிக்கெட் அணியினர் சென்ற சொகுசு பேருந்து விபத்து! 4 வீராங்கனைகள் காயம்!
Baroda womens cricket team BUS accident
பரோடா பெண்கள் கிரிக்கெட் அணியினர் சென்ற சொகுசு பேருந்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 4 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியின் மேற்பார்வையாளர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 11 அம்மா தேதி "சீனியர் பெண்கள் டி20 டிராபி 2022"தொடங்கியது. நவம்பர் 5 அன்று இந்த தொடர் முடிவடைகிறது. மும்பை, விதர்பா, பெங்கால், சண்டிகர், சௌராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அணிகளுடன் பரோடா அணி குழு C இல் இடம் பெற்றுள்ளது.
கவுகாத்தி, பெங்களூரு, சூரத், மும்பை மற்றும் விஜயநகரம் ஆகிய 5 வெவ்வேறு நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று (அக்டோபர் 20) விஜயநகரம் (ஆந்திரப் பிரதேசம்) டாக்டர். பிவிஜி ராஜு ஏசிஏ ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிஷன்ஸ் அட்வான்ஸ்டில் சௌராஷ்டிரா அணியுடன் ஆடிய பரோடா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், விசாகப்பட்டினம் தாடிசெட்லபாலம் தேசிய நெடுஞ்சாலையில் பரோடா பெண்கள் கிரிக்கெட் அணி சென்ற சொகுசு பேருந்து, சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் 4 பேர், அணியின் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தின் பாதிப்பு கடுமையாக இல்லை என்றும், காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
Baroda womens cricket team BUS accident