சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய பென் ஸ்டோக்ஸ்.!
Ben stokes speech about csk team
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாளை முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலியர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். சென்னை அணியால் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பெண் ஸ்டோக்ஸ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியுடனான பயணம் குறித்து பெண் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தோனியின் தலைமையின் கீழ் விளையாடும் போது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அவர் அணியில் நல்ல சூழலை உருவாக்குகிறார் ஆனால் என்னால் இரு போட்டியில் மட்டுமே விளையாட முடிந்தது. அதன் பிறகு நான் காயம் அடைந்தேன். சென்னை அணி வெற்றி அடையும் போது நான் மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ben stokes speech about csk team