பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி.. தொடர்ந்து 4வது முறை.!
Border Gavaskar trophy stats
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தடைந்து.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ந்து 4வது முறையாக இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.
கடந்த 4 பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர்கள்
2016/17ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
2018/19ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
2020/21ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 2-1 என வென்றது.
2022/23 இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதுவரை நேருக்கு நேர்
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இதுவரை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மொத்தம் 56 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 24 போட்டிகளில் இந்திய அணியும், 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 12 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
English Summary
Border Gavaskar trophy stats