ஐபிஎல் சம்பளம் வாங்கியவுடன் முதலில் இதைத் தான் செய்வேன்.. மும்பை வீரர் திலக் வர்மா.!
Buy own house on my ipl salary Mumbai player thilak varma
ஐபிஎல் சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என 19 வயதான மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் 15வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக 19 வயதான திலக் வர்மா விளையாடி வருகிறார். இவரை மும்பை அணி 1.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் விளையாடிய முதல் போட்டியில் 22 ரன்களும், இரண்டாவது போட்டியில் 61 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் வரும் தன்னுடைய சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தையின் சம்பளம் மிகவும் குறைவு எனவும் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தனக்கு கிடைத்த ஸ்பான்சர்ஷிப் களை வைத்தே கிரிக்கெட் செலவுகளை பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Buy own house on my ipl salary Mumbai player thilak varma