வெற்றியாளர் மட்டுமல்ல, தோற்கும் அணிக்கும் பண மழை, எவ்வளவு தெரியுமா ? !! - Seithipunal
Seithipunal


டி20யின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு பரிசுத் தொகையாக பண மழை பொழிந்தது. இம்முறை உலக கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் இந்தத் தொகை ரூ.19.95 கோடி. அனைத்து அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ள பரிசுத் தொகை 11.25 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 93 கோடி ரூபாய் ஆகும்.

டி20 போட்டிகள் கடந்த 28 நாட்களாக நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் 9 இடங்களில் நடந்த 54 பரபரப்பான ஆட்டங்களுக்குப் பிறகு, இப்போது தென்னாப்பிரிக்கா மற்றும்  இந்தியா இடையேயான இறுதிப் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை வெற்றியாளருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெற்றி பெறும் அணிக்கு குறைந்தபட்சம் 2.45 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.19.95 கோடி ஆகும். 

போட்டியில் தோற்று போன அணிக்கு குறைந்தபட்சம் 1.28 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தோராயமாக ரூ.10.64 கோடி. இந்த முறை ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் விநியோகிக்கப்படும் பரிசுத் தொகை குறைந்தது 11.25 மில்லியன் டாலர்கள் அதாவது தோராயமாக ரூ.93 கோடி.

சாம்பியன்: டி20 சாம்பியன் அணிக்கு குறைந்தபட்சம் $2.45 மில்லியன் 12 பெறும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் ரூ.19.95 கோடி கிடைக்கும்.

தோல்வி அடைந்த அணி : டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு குறைந்தபட்சம் $1.28 மில்லியன் கிடைக்கும். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.68 கோடி.

அரையிறுதியில் தோல்வியடைந்தவர்கள் : T20 உலகக் கோப்பையில் தோற்கும் ஒவ்வொரு அரையிறுதிப் போட்டியாளரும் $787,500 பெறுவார்கள். இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.6.58 கோடியாகும்.

இரண்டாவது சுற்றை அடையும் அணிகள் : T20 இரண்டாவது சுற்றுக்கு அப்பால் முன்னேறாத அணிகளுக்கு தலா $382,500 வழங்கப்படும். இந்திய மதிப்பில் ரூ.3.20 கோடிஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cash price for the runner up teams


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->