சாம்பியன்ஸ் டிராபி : அரையிறுதி போட்டி... ஆஸ்திரேலியா அணியின் இலக்கை வெல்லுமா? இந்திய அணி....
Champions Trophy Semifinal match Will india beat the target of australia
துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி மோதுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடைபெற்ற வரும் நிலையில், இந்திய அணி வரிசையாக வங்கதேசம் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 'ஏ' பிரிவில் ஆறு புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி:
தற்போது விளையாடி வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி,மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய அணியும் நான்கு சுழற் பந்து வீரர்களுடன் இந்தியா அணியும் களம் இறங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து 264 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் இலக்கை வெல்லத் தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்தக் கடினமான போட்டியில் இந்திய அணி வெல்லுமா? என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா:
மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 14வது முறையாக டாசை இழந்தார் ரோஹித் சர்மா.ஏற்கனவே,அதிக முறை டாசை இழந்த கேப்டன் பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். இதை ரசிகர்கள் பலர் தனது இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா பேட்டிங்கில் களமிறங்கியுள்ளார்.
English Summary
Champions Trophy Semifinal match Will india beat the target of australia