#BREAKING:: ஐபிஎல் டிக்கெட் விற்பனை நேரத்தில் மாற்றம்..!! மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நேரம் ஒதுக்கீடு..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 74 போட்டிகளில் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் வரும் மே 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்க உள்ளது. வழக்கமாக காலை 9.30 மணி முதல் நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்று வருகின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய கடந்த போட்டியின் டிக்கெட் விற்பனையின் பொழுது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நாளை காலை மே 10ம் தேதி நடைபெற உள்ள சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என புகார் எழுந்ததையடுத்து நாளை காலை 10:30 மணி முதல் 11 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக  2,500 ரூபாய்க்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IPL ticket sales time changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->