செஸ் ஒலிம்பியாட் போட்டி : திடீரென பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பு.!!
Chess Olympiad 2022 Pakistan boycott
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஜோதி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் அமைந்துள்ள போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 187 நாடுகளை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் பிரிவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விளையாட்டுடன் அரசியல் கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயிர் மட்ட அளவில் எழுப்புவோம் என தெரிவித்துள்ளது.
English Summary
Chess Olympiad 2022 Pakistan boycott