பயங்கர எதிர்பார்ப்புடன் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி - தங்கத்தை வெல்லுமா இந்தியா? - Seithipunal
Seithipunal


உலகளவில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று முதல் ஆரம்பமாகி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. 

மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் ஓபன் பிரிவு அணியில் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா உள்ளிட்டோரும், மகளிர் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் உள்ளிட்டோரும் உள்ளனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் உள்ளிட்டவை அளிக்கப்படும். 'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். 

இந்தப் போட்டியில், 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் ஒரு அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

கடந்த முறை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஆனால் இந்த முறை முன்பை விட மிகவும் வலுவான அணியாக இந்தியா களம் காண உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chess olympiad game start today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->