செஸ் ஒலிம்பியாட் : 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்றில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

நடைபெறும் இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற குறைந்த வயது வீராங்கனை ராண்டா சேடர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் போட்டி : 2வது சுற்றில் இந்தியா B அணி பொது பிரிவில் களமிறங்கிய தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். 

இந்தியா C அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோ வீரர்ருடன் மோதிய முரளி 30வது நகர்த்தலின்போது கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.

மேலும், இந்தியா C அணியில், மகளிர் பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.

 

காமென்வெல்த் போட்டி : ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் 'சங்கேத் சர்கார்' வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ளார்.

பளுதூக்கும் வீரர் குருராஜ் பூஜாரி ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 269 கிலோ எடைப் பளுதூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் சில அண்மைய செய்திகள் : சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் வார விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்றும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை முதல் பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது என்றும் பூங்கா இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chess Olympiad Randa Cheder Palestine won


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->