காமன்வெல்த் : 'முதல் இந்தியர்' என்ற சாதனையை படைத்த இந்திய பெண் சிங்கம்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.

பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி கடந்தார். 

காமன்வெல்த் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி பெற்றுள்ளார். 

முதலிடத்தை பிடித்த ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், மூன்றாம் இடம்பிடித்த கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

முன்னதாக 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் இந்தியர் ஹர்மிந்தர் சிங் வெண்கலம் வென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commonwealth Games Race Walk Priyanka Goswami


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->