அஸ்வின் ஓய்வு: நெகிழ்ச்சியுடன் சச்சின் போட்ட டிவிட்! தலைசிறந்தவர் - பாராட்டி தள்ளிய பாட் கம்மின்ஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கிரிக்கெட் கடவுள் சச்சின் நெகிழ்ச்சியுடன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "அஸ்வின், உங்கள் மனதும் மூளையும் ஒன்றிணைந்து போட்டியை அணுகும் விதம் எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கேரம் பந்தை வீசுவது முதல் முக்கியமான ரன்களை அடிப்பது வரை வெற்றிக்கான வழிகளை கண்டுபிடிக்கிறீர்கள்.

இளம் திறமைசாலியாக இருந்து இந்தியாவின் முக்கிய ஆட்ட நாயகனாக வளர்ந்ததைக் காண்பது அற்புதம். பரிசோதனை செய்ய பயப்படாமலும், பரிணாமம் அடைவதும்தான் உண்மையான மகத்துவம் என்பதை உங்கள் பயணம் நிரூபிக்கிறது. உங்கள் பயணம் அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது. வாழ்க்கையின் இரண்டாவது கட்டத்திற்கு என் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவிக்கையில், "அஸ்வின் ஓய்வு ஆச்சரியமானது. அவர் உலகம் முழுவதும் சிறப்பாக விளையாடினார். நீண்ட காலம் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைவே. இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் அவர் மிகச் சவாலான பந்துவீச்சாளர். அவர்மீது எங்கள் அணியினருக்கு மிகுந்த மரியாதை உள்ளது," என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricket Ashwin retirement Sachin wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->