புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறிய சென்னை அணி.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 61 ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 141 ரன்களை எடுத்தது. 

இதைத் தொடர்ந்து 142 ரன்களுடன் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை அடித்து அசத்தினார். 

இறுதியில், சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk go to third place in ipl point list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->