#IPL2023 : குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வில்லியம்சன் விலகல்.. அதிரடி ஆல்ரவுண்டர் சேர்ப்பு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

இதில், கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், முதலில் பீல்டிங் செய்த போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் காலில் காயமடைந்தார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயாராக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

இதனையடுத்து கேன் வில்லியம்சனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான தசுன் ஷனகா சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dasun shanaka replaces Kane Williamson in gujrat Titans


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->