சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி 05-வது வெற்றியை பெற்ற டெல்லி அணி..!
Delhi beat Rajasthan in the Super Over to win their 5th match
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அணி சார்பில் அபிஷேக் பொரேல் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 02 விக்கெட்டுகளையும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 189 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 04 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 02 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. டெல்லி 04 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டார்கின் அபார பந்து வீச்சு மற்றும் ரன் அவுட் செய்ததன் மூலம் சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபாரமாக விளையாடியது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி 05 வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணி 07 போட்டிகளில் விளையாடி 02 வெற்றிகளை பெற்று 05 தோல்விகளை சந்தித்துள்ளது.
English Summary
Delhi beat Rajasthan in the Super Over to win their 5th match