உலக கேரம் போட்டி - தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


ஆறாவது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா பங்கேற்றிருந்தார். 

இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என்று மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில் காசிமாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது,

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்" என்று தெரிவித்துள்ளார். காசிமா ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy cm uthayanithi wishes to won gold medol girl in world carem competition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->