தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர்.அசோக் சிகாமணி தேர்வு!
DrAshok selected as TNCricket Association President
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி குழந்தைகள் நல மருத்துவராவும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபு தலைமையிலான அணியினர் பின் வாங்கியதே இதற்கு காரணம்.
இதற்கு முன்பு இவர் 2019 முதல் 2022 வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கர் துணைத் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அணியைச் சேர்ந்த பழனி செயலாளராகவும் சீனிவாச ராவ் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகள் சமீப காலமாக கிரிக்கெட் சங்க நிர்வாகத்தின் உயர் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர். இவரைப் போன்றே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்து வருகிறார். ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோது திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DrAshok selected as TNCricket Association President