கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்! அன்ஷிமான் கெய்க்வாட் காலமானார்!
Former Indian cricketer Anshiman Gaekwad passed away
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அன்ஷிமான் கெய்க்வாட் காலமானதாக செய்தி வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1974 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கி வந்தவர் அன்ஷிமான் கெய்க்வாட். இவர் இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 2 சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் விளாசி உள்ளார்.
205 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 சதங்கள் மற்றும் 47 அரை சதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 11:00 மணி நேரம் காலத்தின் இன்று இரட்டை சதம் அடித்து பாகிஸ்தானை கதற வைத்தவர் அன்ஷிமான் கெய்க்வாட்.
அதன் பின்னர் அவர் பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக செயல்பட முடியாது என்று 2009 ஆம் ஆண்டு பொறுப்பை ஏற்க மறுத்தார்.
அதன் பின்னர் 71 வயதான அன்ஷிமான் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இவரின் சிகிச்சை தருவதற்காக இந்திய கிரிக்கெட் நல வாரியம் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்தது. லண்டன் கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மாதம் இந்தியா திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வடோதராவில் உள்ள பைபால் அமீன் புது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்ஷிமான் கெய்க்வாட் சிகிச்சை பலன்களை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட கிரிக்கெட் ஜாம்பவான்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Former Indian cricketer Anshiman Gaekwad passed away