விராட் கோலி மீதான விமர்சனம் : வரிந்துகட்டி வந்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர், முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக பேட்டிங்கில் மோசமாக விளையாடி வருவதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  

குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ், விராட் கோலிக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். நான் அவர்களுக்கு தெரிவிப்பதெல்லாம், கடந்த பத்து ஆண்டுகளில் விராட் கோலிதான் சிறந்த வீரர். தற்போது சதம் மட்டும் தான் அடிக்கவில்லையே தவிர ரன் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். 

மேலும், சமூக வலைதளங்களில் விராட் கோலியை விமர்சிப்பது சரியல்ல. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று எப்படி ஒருவரால் சொல்ல முடியும்? கபில் தேவ் என்னுடைய மூத்த வீரர். அவரது கருத்தை மதிக்கிறேன். ஆனால் விராட் கோலி 70 சதம் அடித்துள்ள ஒரு தலைசிறந்த வீரர் என்பதை மறந்து விட வேண்டாம்". என்று ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Pakistan player Shoaib Akhtar supports Virat Kohli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->