மீண்டும் புள்ளி பட்டியலில் அதிரடியாக முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்.!!
GT team top the points table
ஐபிஎல் 15-வது சீசனின் 40வது லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. குஜராத் அணி 20 ஓவரில் 199 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 8 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றி பெற்ற 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கடைசி ஐந்து இடங்களில் பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் உள்ளது.
English Summary
GT team top the points table