பஞ்சாப்பை வெளுவெளுனு வெளுத்த குஜராத் அணி!! - Seithipunal
Seithipunal


அகமதாபாத் : இன்றைய ஐபில் போட்டியில் முதலாவதாக கலமிறங்கிய குஜராத் அணி 199 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி வெற்றிபெற 200 ரன்கள் இலக்கு.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி.குஜராத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். கலமிறங்கிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாஹா கூட்டணி தள்ளிஆடி ரன்களை சேர்த்தது. 11 ரன்யில் ஆட்டமிழந்து வெளியேறினார் சஹா.

குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். இதன்பின் சுப்ம்ன கில் - கேன் வில்லியம்சன் கூட்டணி தேவைக்கேற்ப கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் பவுண்டரிகளை விளாசி வந்தனர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 52 ரன்கள் சேர்த்தது. பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடிக்க, குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது.  சுப்மன் கில்லை பின்னர் ஹர்சல் படேல் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 12 ரன்கள் சேர்க்கப்பட, ரபாடா வீசிய 18வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரில் சிக்சர் அடிக்க முயன்று விஜய் சங்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி வீரர் ராகுல் டிவாட்டியா களமிறங்க ஆட்டம் பரபரப்பானது.

இதன்பின் 19வது ஓவரை வீச மீண்டும் ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 ஒய்டுகள் உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் வந்தார். இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. 

பஞ்சாப் அணிக்கு 200 ரன் இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத்!!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat team beat Punjab white!!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->