சென்னை அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!!
Gujarat team won by defeating Chennai team
நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நேற்று 59வது லீக் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமன் கில் மற்றும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி தலா சதங்களை விளாசினார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்களை இழந்து 231 ரன்களை குவித்தது.
போட்டியின் இரண்டாம் பாதியில், 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திரா ரன் ஆகினார். ரஹானே 1 ரன் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதிகபட்சமாக மிட்செல் 34 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து 196 ரன்களை அடித்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
ஐபிஎல் போட்டியில் சென்னை இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றியும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றியையும் 7தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
English Summary
Gujarat team won by defeating Chennai team