செஸ் ஒலிம்பியாட்டில் வரலாற்று சாதனை!....தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து!
Historic achievement in Chess Olympiad Chief Minister congratulates Indian team who won gold
ஹங்கேரிய நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டதில், இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதே போல் பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது! 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024-ல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
Historic achievement in Chess Olympiad Chief Minister congratulates Indian team who won gold