சாம்பியன்ஸ் கோப்பைக்கு செல்ல தகுதி இழக்கப்போகும் அணிகள்!
ICC Champion leak 2025
நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள், வரும் 2025-இல் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதிபெறும் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்த 7 அணிகளுடன், போட்டியை நடத்தும் பாகிஸ்தானும் இணையும்.
நடப்பு உலகக் கோப்பை போட்டியின் தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து, வங்கதேச அணிகளே சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதிபெறுவது மிக மிக கடினம் என்றாகிவிட்டது.
அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான், நெதா்லாந்து அணிகள் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து உள்ளன.
இதுதவிர, நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.
மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் களம் காணாத மேற்கிந்தியத் தீவுகள், அயா்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 8 அணிகள், 2 குருப்-களாக பிரிக்கப்பட்டு, அவற்றில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.