பிட்சா கட்டாந்தரையா? பேட்ஸ்மேன்களை அலரவிட்ட நியுயார்க் மைதானம்! - Seithipunal
Seithipunal


ஐசிசி நடத்தும் 17வது உலகக்கோப்பை போட்டிகளை வெஸ்ட் இண்டீசுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வருகிறது. இந்த தொடரில் எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

லீக் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. அமெரிக்கர்களிடையே டி20 கிரிக்கெட்ட மீது ஆர்வம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு போட்டியையும் காண 36000 ரசிகர்கள் வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற சிறிய அணிகள் பாகிஸ்தான் போன்ற ஜாம்பவான் அணிகளை  தோற்கடித்து வருவதால் போட்டியின் சுவாரசியம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. 

இது சிறிய அணிகளுக்கு உத்வேகத்தை கொடுத்தாலும், பொதுவான ரசிகர்கள் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் குறித்து விமர்சனங்களை முன் வைக்கின்றனர். டி20 போட்டி என்றாலே பவர் பிளேவில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களின் கையே ஓங்கி இருக்கும். 6 ஒவருக்குள் சிக்சரையும் பவண்டரிகளையும் பறக்க விடுவார்கள். ஆனால் நியூயார்க் மைதானத்தில் பவுண்டரிகள் செல்வதே அரிதாக இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் 140 ரன் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியில் 80 ரன்களும், இந்தியா -அயர்லாந்து போட்டியில் 97, கனடா - அயர்லாந்து போட்டியில் 137, நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா ஆட்டத்தில் 106 , இந்தியா -பாகிஸ்தான் போட்டியில் 119, தென்னாப்பிரிக்கா -வங்கதசம் போட்டியில் 113 ரன்களும் நேற்று நடைபெற்ற இந்தியா _அமெரிக்கா இடையிலான போட்டியில் 11O என்ற குறைந்த இலக்கைக் கூட எட்டுவதற்கு இந்தியா சிரமப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே 100 ரன் அடித்ததை பார்த்த இந்திய ரசிகர்களுக்கு இது சுவாரஸ்யத்தை கொடுக்காதது ஆச்சரியம் இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த பிட்சில் பந்தை உலக தரம் வாய்ந்த விரர்களால் கூட பந்தை கணிக்க முடியவில்லை. அதோடு காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த புகார்களை ஆமோதிக்கும் விதமாக ஐசிசியும் நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் நாம் விரும்பியபடி இல்லை என்று கூறியுள்ளது. மேலும் கேரி கிர்ஸ்டன், கிளாசன் போன்ற வீரர்களும் பிட்ச் சின் தன்மை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த இந்தியா-அமெரிக்கா மோதிய போட்டியோடு நியார்க் மைதானத்தில் நடைபெற்று வந்த போட்டிகள் முடிவடைந்தது. இனி நடைபெறும் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள தால் விரர்களுடன் ரசிகர்களும் பெருமூச்சு விடுகின்றனர். இனி வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC t20 cricket match held in America Newyork pitch is not good


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->