முதல் அணி வெளியேறியது! பாகிஸ்தான் நிலை என்ன? எஞ்சிய இரு இடம், 7 அணிகள் போட்டி!
ICC world Cup 2023 Bangladesh eliminated
உலக்கோப்பை தொடரின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நெதா்லாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. வங்கதேச அணி தொடரிலிருந்து வெளியேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதா்லாந்து அணி முதலில் களமிறங்கி பெட்டின் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற, கேப்டன் ஸ்காட் எட்வா்ட்ஸ் 6 பவுண்டரியுடன் 68 ரன்களையும், வெஸ்லி பாரெஸி 8 பவுண்டரியுடன் 41 ரன்களை சேர்த்தனர்.
நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் நெதா்லாந்து அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, நெதா்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 42.2 ஓவா்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதா்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பால் வேன் மீக்கெரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அனுபவமுள்ள வங்கதேசம் மற்றும் சவுத் ஆப்ரிக்காவை வென்றுள்ள நெதர்லாந்து அணி, உலகக் கோப்பை தொடரில் இரு வெற்றிகளை பெறுவது இதுவே முதன்முறை.
6 ஆட்டங்களில் விளையாடி உள்ள வங்கதேசம் 5-வது தோல்வியை பதிவுசெய்துள்ளது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சம் 8 புள்ளிகளையே எட்ட முடியும் என்பதால், இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. புள்ளி பட்டியலில் முதல் இரு இடத்தில் தலா 10 புள்ளிகளுடன் உள்ள இந்தியா, சவுத் ஆப்ரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது 99% உறுதியாகிவிட்டது.
புள்ளி பட்டியலில் தலா 8 புள்ளிகளுடன், 3, 4-காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த இரு அணிகளும் எஞ்சியுள்ள தலா 3 ஆட்டங்களில் தோல்வியடைந்தால் மட்டுமே, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய 5 அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும்.
அதுவும் இந்த 5 அணிகளும் இனி தோல்வியை சந்திக்க கூடாது. தோற்றால் வெளியேருவது என்ற நிலை தான். இனி நடக்கும் ஒவ்வொரு லீக் ஆட்டமும் அரையிறுதிக்கு செல்வதற்கான ஆட்டம் என்பதால், சுவாரசியம் மிகுந்ததாக அமைய போவது உறுதி.
English Summary
ICC world Cup 2023 Bangladesh eliminated