இது முட்டாள்தனம் - கடுப்பான மேக்ஸ்வெல்! ஆரவாரமாக வரவேற்ற வார்னர்! - Seithipunal
Seithipunal



உலக்கோப்பை லீக் தொடரில் நெதர்லாந்துக்கு, ஆஸ்திரேலிய அணி மரண தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது

முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. ஆரம்பமே அதிரடியாக மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 100 ரன் அடித்து சாதனை புரிந்தார். வார்னரும் அசத்தலான ஒரு செஞ்சுரியை பதிவு செய்தார்.

இதனையடுத்து 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 21 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 48 வருட உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை என்ற சாதனை வெற்றி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் நடைபெற்ற டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் புதிய முயற்சியாக 'லைட் ஷோ' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

அதாவது வீரர்கள் செஞ்சுரி அடிக்கும்போதும், அணி வெற்றிபெறும் போதும் மைதானத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டன. 

சுமார் இரண்டு நிமிட இந்த 'லைட் ஷோ'வினால் மைதானமே வண்ணங்கள் நிறைந்த காட்சியை கொடுத்தது. மேலும், இந்த லைட் ஷோ ரசிகர்களுக்கு மிகுந்த உச்சகத்தை கொடுக்க, ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர்.

ஆனால், இந்த லைட் ஷோ ஏற்பாட்டை ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 'மோசமான யோசனை' என்று விமர்சித்துள்ளார். 

இதற்க்கு அவர் கூறும் காரணம், "பெர்த் ஸ்டேடியத்தில் நடந்த பிக் பாஷ் லீக் ஆட்டத்தின்போதும் இதுபோல் 'லைட் ஷோ' போடப்பட்டது. இந்த லைட் ஷோ நிகழ்த்தப்படும்போதெல்லாம் எனக்கு தலைவலி வருவதுபோல் உணர்கிறேன். லைட் ஷோ முடிந்து என் கண்களை சரிசெய்ய சிறிதுநேரம் ஆகிறது. இது எனது விளையாட்டை பாதிக்கிறது. எனவே, என்னால் முடிந்தவரை 'லைட் ஷோ' -வை தவிர்க்க முயல்கிறேன். 

ஆனால், ரசிகர்களை கவர இது சிறந்த முயற்சி, கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இது முட்டாள்தனமான யோசனை என்று தான் நினைக்கிறேன்" எனத் தனது அதிருப்தியை மேக்ஸ்வெல் வெளிப்படுத்தியுள்ளார் .

ஆஸ்திரேலிய வீரர் வார்னர் தெரிவிக்கையில், “எனக்கு இந்த லைட் ஷோ ரொம்ப பிடிச்சுருக்கு. உண்மையில் நல்ல ஒரு சூழல் அது. எல்லாமே ரசிகர்களுக்காக தான். ரசிகர்கள் இல்லாமல், நாங்கள் விரும்புவதை செய்ய முடியாது" என்று லைட் ஷோ நிகழ்ச்சியை வரவேற்று வார்னர் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 delhi Stadium Light Show issue Maxwell and Warner


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->