கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலிய அணியை திணறடிக்கும் இந்தியா!  - Seithipunal
Seithipunal



உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அகமதாபாத் நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் போல சிறப்பான ஒரு தொடக்கத்தை கொடுத்து 47 ரங்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து  ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் 4 ரன்களில் வெளியேறினார். அதன்பின் அதிரடியாக விளையாடிய விராட் கோலி, கே.எல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் சேர்த்தார்.

இதில், விராட் கோலி 54 ரன்னுக்கும், கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்கள், முகமது ஷமி  6 ரன்கள், ஜஸ்பிரித் பும்ரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் , பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போதுவரை 8 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 final IND vs AUS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->