ஒரே ஆட்டம்! இரண்டே பேர்! மகத்தான 10 சாதனைகள்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கலீல் ஏற்பட்ட தசை பிடிப்பு வலியுடன் விளையாடி இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான 10 சாதனைகள் பின்வருமாறு: 

* உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 10 சிக்ஸ் அடித்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் மோர்கன் (17 சிக்ஸ்), கெய்ல் (16 சிக்ஸ்), மார்ட்டின் கப்தில் (11 சிக்ஸ்), பஹர் ஜமான் (11 சிக்ஸ்) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.


* மேக்ஸ்வெல் நேற்று 128 பந்தில் இரட்டை சதம் அடித்திருந்தார். இது சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் 2வது அதிவேக இரட்டை சதமாகும். 

முதலிடத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன் 126 பந்திலும், மூன்றாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் 138 பந்தில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

* உலகக் கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் (292 ரன்கள்) இதுவாகும்.

* இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் சதம் விளாசியதன் மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர என்ற பெருமையை பெற்றுள்ளார். 

* தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்காத ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

இதற்கு முன் சார்லஸ் காவென்ட்ரி 194 ரன்கள் நாட்அவுட்), விவ் ரிச்சர்ட்ஸ் (189 ரன்கள் நாட்அவுட்), டு பிளிஸ்சிஸ் (185 ரன்கள் ) சாதனை படைத்திருந்தனர்.

* உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் மேக்ஸ்வெல் 3-வது இடம் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் கெய்ல் 49 சிக்ஸர், ரோகித் சர்மா 45 சிக்ஸர் உடன்முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

* ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக வாட்சன் 185 (நாட்அவுட்), ஹெய்டன் (181 நாட்அவுட்), டேவிட் வார்னர் 179 மற்றும் 178) ரன்கள் அடித்துள்ளனர்.

* 7-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்- கம்மின்ஸ் ஜோடி குவித்த 202 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 7-வது விக்கெட்டுக்கு பட்லர்- ரஷித் ஜோடி 177 ரன்களும், ஆபிஃப் ஹொசைன்- மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி 174  ரன்களும் குவித்திருந்தனர்.

* உலகக் கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தை பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் மார்ட்டின் கப்தில் (237 நாட்அவுட்), கெய்ல் (215) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

* சேஸிங்கில் இதுதான் அதிகபட்ச தனிநபரின் ஸ்கோர் இதுவாகும் ஆகும். இதற்கு முன் சேஸிங்கில் பஹர் ஜமான் 193 ரன்கள் எடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc world cup 2023 maxwell and ibrahim record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->