திக்கு திணறி போன மேக்ஸ்வெல்! அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க?!
ICC World Cup 2023 maxwell match and wish
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 39-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று, அரையிறுதிக்கும் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜர்டான் 129 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் உலக்கோப்பை வரலாற்றில் சத்தம் அடித்த முதல் ஆப்கான் வீரர் என்ற பெருமையையும் இப்ராஹிம் ஜர்டான் படைத்தார்.
இதனையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ஆப்கான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கிளென் மேக்ஸ்வெல்லும், ஆட்டத்தின்போது வலது காலில் தசைப்பிடிப்பால் நடுக்கத்துடன் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த வலியுடனையே தனது அதிரடி ஆட்டத்தாலும், கேப்டன் கம்மிஸ் துணையாலும் இரட்டைச் சதம் அடித்து, அணியையும் வெற்றிபெறச்செய்தார்.
நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் ஆன மேக்ஸ்வெல்க்கு, ரசிகர்கள், போட்டி முடிந்ததும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ‘என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டி இதுதான்’ என்று பாராட்டியுள்ளார்.
இதேபோல் விராட்கோலி உள்ளிட்ட பல பிரபல கிரிக்கெட் வீரர்களும், திரைபிரபலன்களும், ரசிகர்களும் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தைப் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேக்ஸ்வெல் தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், "உங்கள் அன்பினால் திணறிவிட்டேன். வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. என்னுடன் பேட் கம்மின்ஸ் மைதானத்தில் இருந்தது அற்புதம். இனி தந்தைக்கான கடமைகளுக்கு திரும்பும் நேரம்" என்று தெரிவித்துள்ளார்.
மறக்கவே முடியாத ஒரு ஆட்டத்தை வழங்கிய மேக்ஸ்வெல்லுக்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் வாழ்த்து மழை பொழிகிறது.
English Summary
ICC World Cup 2023 maxwell match and wish