அந்த இரு அணிகளின் கனவை கலைக்குமா நியூசிலாந்து? பரபரப்பான ஆட்டம்!
ICC World Cup 2023 NZ vs SL
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 41 வது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இதுவே கடைசி லீக் ஆட்டம்.
இலங்கை அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் 99% அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும்.
தோற்கும் பட்சத்தில் நியூஸிலாந்தும் வெளியேற வாய்ப்பு உள்ளது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் அது நியூஸிலாந்துக்கு பாதகமாகவே முடியும்.
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெறும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் நியுசிலாந்து அணி தோற்றால் மட்டுமே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு உள்ளது.
காரணம் நியுசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தான். ஒருவேளை நியுசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் 3 அணிகளும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றால் தலா 10 புள்ளிகளுடன் இருக்கும். தற்போதைய நிலையில் நெட் ரன்ரேட் கணக்கிட்டால் நியுசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு சென்றுவிடும்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்பிரிக்கா மோதுவது உறுதியாகிவிட்டது. இந்திய அணியுடன் நியுசிலாந்து அணி மோதவே அதிக வாய்ப்பு உள்ளது.
மேக்ஸ்வெல் செய்த மேஜிக் போல பாகிஸ்தான் அணி ஏதேனும் மேஜிக் செய்தால் தான் அரையிறுதிக்கு செல்லும். எதிர்த்து ஆடக்கூடிய அணி பலவீனமான இங்கிலாந்து அணி என்பதால், பாகிஸ்தான் முழு பலத்தை பயன்படுத்தினால் அந்த மேஜிக் நடக்க வாய்ப்புள்ளது.
English Summary
ICC World Cup 2023 NZ vs SL