பாகிஸ்தானை நடுங்கவிட்ட அயர்லாந்து! முதல் ஆட்டமே ரணகளம்!
ICC World Cup 2023 PAK vs NED match result
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகர் சமன் 12 ரன்னுக்கும், இமாம்-உல்-ஹக் 15 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களை பதறவைத்தார்.
10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 43 ரன்னுக்கு தடுமாறிய பாகிஸ்தான் அணியை, ரிஸ்வான் - சஹில் ஜோடி நிதானமான ஆடி மீட்டு எடுத்தது.
இருவரும் தலா 68 ரன்னுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து முஹம்மது நவாஸ் 39- சதாப் கான் 32பார்ட்னர் ஷிப் அமைத்து ஆடினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில், நெதர்லாந்து அணியின் பந்து வீச்சுக்கு அடிபணிந்து, 286 ரன்களை சேர்த்தது.
நெதர்லாந்து பந்துவீச்சை பொறுத்தவரை டி லீடே 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த உலகக்கோப்பை 2 வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு பெரும் பேசு பொருளாகியுள்ளது.
இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் ஓ'டவுட் 5 ரன்னில் ஆட்டமிழக்க கொலின் அக்கர்மேன் 17 ரன்னில் வெளியேறினார்.
விக்ரம்ஜித் சிங் உடன் ஜோடி சேர்ந்த பாஸ் டி லீடே பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிதறடித்து, இருவரும் அரைசதம் கண்டு ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கமுடியாமல் அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தந்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகனாக ஷகீல் தேர்வு செய்யப்பட்டார்.
நெதர்லாந்து அணியில் இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் பாகிஸ்தான் அணி தோல்வியை கூட தழுவி இருக்கும். மேலும், நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 68 ரன்களை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
English Summary
ICC World Cup 2023 PAK vs NED match result