பாகிஸ்தான் அணியை மரண பங்கமாக கலாய்த்த பாகிஸ்தான் ஜாம்பவான்கள்!
ICC World Cup 2023 Pakistan semi final issue
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துமுடிந்த லீக் ஆட்டங்களில் அடிப்படையில், அரை இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் முன்னேறியுள்ளன.
பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
நான்காவது அணியாக நியூசிலாந்து செல்லவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி செல்ல வாய்ப்பு இருந்தாலும், அது கடினமான ஒன்று. நாளை கொல்கத்தாவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அசாத்தியமான முறையில் வீழ்த்தி, ஒரு அபார சாதனை வெற்றியை பாகிஸ்தான் அணி பதிவு செய்ய வேண்டும்.
நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து முதலில் களமிறங்கினாள், பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிடும். காரணம் இங்கிலாந்து அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி, அந்த இலக்கை 3.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி எட்ட வேண்டும். அதற்க்கு எந்த வாய்ப்பும் இல்லை.
ஒருவேளை பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி இமாலய ரன்னை, உதாரணத்திற்கு ஒரு 400, 450, 500 ரன்கள் அடித்து, இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் வாய்ப்பு உள்ளது.
ஆனால், முடியுமா? இதைத்தான் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் செம்மையாக கலாய்த்து உள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நிகழ்ச்சி வாசிம் அக்ரம், "பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும். பின்னர் இங்கிலாந்து அணி வீரர்களை, அவர்களின் டிரெஸ்ஸிங் அறையில் 20 நிமிடங்கள் பூட்டி வைக்க வேண்டும்.
அப்படி செய்தால் அனைவரையும் 'டைம்டு அவுட்' முறையில் அவுட் ஆகிவிடுவார்கள், பாகிஸ்தான் எளிமையாக வெற்றிபெற்றுவிடும்" என்று வாசிம் அக்ரம் கலாய்த்து உள்ளார்.
இதையும் விஞ்சிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், "பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணி வீரர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டால், பாகிஸ்தான் அணி இன்னும் எளிதாக வெற்றிபெற்றுவிடும்" என்று தனது நாட்டு அணியை மரண பங்கமாக கலாய்த்து உள்ளார்.
English Summary
ICC World Cup 2023 Pakistan semi final issue