இதுமட்டும் நடந்தால்... பாகிஸ்தான் வெளியேறுவது உறுதி!
ICC World Cup 2023 PakvsAFG and PAKvsSA
சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களின் நிதானமான ஆட்டத்தால் எட்டினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆப்கன் வென்றுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டங்களில் ஹாட்-ட்ரிக் தோல்வியை தழுவி உள்ள பாகிஸ்தான் அணி, அரையிறுதி சுற்றுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை நெதர்லாந்து மற்றும் இலங்கையை அணியை மட்டுமே வீழ்த்தியுள்ள பாகிஸ்தான் அணி, வரும் வெள்ளிக்கிழமை பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நியில் தள்ளப்பட்டது.
தென் ஆப்ரிக்க அணியும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் அடுத்து நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுடன் மோத உள்ளது. இந்த 4 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பற்றி யோசிக்கலாம்.
தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் கிட்டத்தட்ட அரையிறுதிக்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகளை பொறுத்தவரை தொடர் வெற்றியை பதிவு செய்தால் அரையிறுதி உறுதி. ஆனால், அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணி லீக் போட்டியுடன் வெளியேறுவது உறுதி.
English Summary
ICC World Cup 2023 PakvsAFG and PAKvsSA