சச்சின் சாதனையை சமன் செய்த ரிச்சின்! வேதனையில் மிட்செல் ஸ்டார்க்!
ICC World Cup 2023 Richin Ravindra new record with sachin
உலகக் கோப்பை தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரு அணிகளும் வெல்ல வாய்ப்பு இருந்த நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா அணி 388 ரன்களை குவித்தது.
399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இதுலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே 28 ரன்களுக்கும், வில் யங் 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, எப்போதும் போல சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா, 77 பந்துகளில் சதமடித்தார்.
89 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட, 116 ரன்களுக்கு ரச்சின் ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் சென்று, வெற்றியும் பெற்றது.
இந்த ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திர பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார். அதில், 26 வயதுக்குள் உலகக் கோப்பையில் சதமடித்த விரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார் ரச்சின் ரவீந்திரா. (23 வருடம் 244 நாள்கள்). இந்தப் பட்டியலில் சச்சின் (22 வருடம் 313 நாள்கள்) முதலிடத்தில் இருக்கிறார்.
மேலும், நியூசிலாந்து அணிக்காக ஒரே உலகக் கோப்பையில் 2 சதமடித்த வீரர்கள் பட்டியலில் 4வது வீரராக இணைந்துள்ளார். முன்பாக க்ளென் ரட்னர் (1975), மார்டின் கப்டில் (2015), கேன் வில்லியம்சன் (2019) அடித்து உள்ளனர்.
மேலும், ரச்சின் ரவீந்திரா குறைந்த பந்துகளில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படித்துள்ளார் .
இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க், விக்கெட் ஏதும் எடுக்காமல் 89 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பை தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசியது இதுவே முதல் முறை.
உலகக் கோப்பை தொடர் 2015, 2019, 2023 என இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க், முதல் முறையாக ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஒரு ஆட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற தனது பழைய மோசமான சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்து, மீண்டும் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை தலா 6 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள், 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 3, 4-வது இடத்தில் உள்ளன.
English Summary
ICC World Cup 2023 Richin Ravindra new record with sachin