தோல்வி எதிரொலி! கிரிக்கெட் வாரியம் கலைப்பு! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வி மற்றும் இந்திய அணியுடனான படு பயங்கரமான தோல்வியை தொடர்ந்து, இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்படுவதாக, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் தனது அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. 

அதே சமயத்தில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 5-ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை அணி, தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைப்பதாக, அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால வாரிய தலைவராக அர்ஜுனா ரணதுங்காவை நியமித்து அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார். 

இந்த இடைக்கால கிரிக்கெட் வாரியத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World cup 2023 SL cricket board


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->