தயாரா இருங்க.! ஆகஸ்ட் 10ம் தேதி முதல்.. உலக கோப்பை டிக்கெட் விற்பனை.!!
ICC World Cup 2023 ticket sale from 10th August
இந்தியாவில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணி மொத்தம் ஒன்பது லீக் போட்டியில் விளையாட உள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அக்டோபர் 15ஆம் தேதிக்கு முதல் நாள் நவராத்திரி திருவிழா என்பதால் தேதியை மாற்ற வேண்டும் என சில கிரிக்கெட் வாரியங்களும் கோரிக்கை வைத்துள்ளதாக ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தற்பொழுது டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டாலும் போட்டி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பு நேரடி டிக்கெட் விற்பனையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் டிஜிட்டல் டிக்கெட் முன்பதிவு கவுன்டரில் டிக்கெட் வாங்கி இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசிக்கு 1295 டிக்கெட்டுகளும், பிசிசிஐக்கு 500 டிக்கெட் களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ICC World Cup 2023 ticket sale from 10th August