48 வருட உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!
ICC WorldCup 2023 AUS vs Netherland match records
ஆரம்பத்தில் சுவாரசியம் இல்லாமல் போய்க்கொண்டு இருந்த நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை சுவாரஸ்யமிக்கதாக மாற்றிய பெருமை நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளையே சாரும்.
மரண வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டு, எதிர் அணிகளை துவம்சம் செய்துவந்த தென் ஆப்ரிக்காவை காலி செய்த நெதர்லாந்துக்கு, ஆஸ்திரேலிய அணி மரண தோல்வியை பரிசாக கொடுத்துள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது. ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய வார்னர் வார்னர் 104 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்மித், லபுஷேன் தங்கள் பங்குக்கு முறையே 71, 62 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், மேக்ஸ்வெல் அடித்த அந்த 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கிய 40 பந்துகளில் சதம் இன்னும் பல ஆண்டுகள் பேசும். உலக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்தின் பந்து வீச்சை பொறுத்தவரை வான் பீக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதனையடுத்து 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 21 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. எப்போது போல அசத்திய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மேலும், 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 48 வருட உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை என்ற சாதனை வெற்றி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
English Summary
ICC WorldCup 2023 AUS vs Netherland match records