#INDvsAUS : முதல் ஒருநாள் போட்டி.. இந்தியா அபார பந்துவீச்சு.. சொற்ப ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்.!
IND vs AUS 1st ODI match Australia target of 189 runs against India
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பௌலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 22.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 குவிந்திருந்தது.
ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
English Summary
IND vs AUS 1st ODI match Australia target of 189 runs against India