வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி.? இன்று இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

முக்கிய வீரர்கள் விலகல்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து தனது சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதேபோல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்கு கேப்டனாக வழிநடத்துவார். ஏற்கனவே இவர் டி20 அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகியுள்ளார். இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் அணி

இந்திய அணி :

ஷுப்மான் கில், இஷான் கிஷன்(வி.கீ), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா (கே), ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல்/குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

ஆஸ்திரேலியா அணி :

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்(கே), மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ்/மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி(வி.கீ), சீன் அபோட், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 143 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 80 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 53 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 1st ODI match today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->