சென்னையில் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை.. நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுக்காக நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கிய நிலையில், ரூ.1500, ரூ.3000  டிக்கெட்டுகள் சில மணி நிமிடங்களில் வெற்றி தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், ரூ.5000, ரூ.6000, ரூ.8000, ரூ.10,000 டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  நேரடி டிக்கெட் விற்பனை இன்று காலை 11மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள நேரடி கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், C, D & E கேலரியில் உள்ள ரூ.1500 டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிக்கெட்டுகளை வாங்குவதற்காக நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்து வரும் நிலையில், முன்கூட்டியே டிக்கெட் விநியோகத்தை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd ODI Chepauk ticket counter long row


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->