#DAY4 : இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் போட்டி.. இந்திய அணி த்ரில் வெற்றி.!
IND vs BAN 2nd test india won by 3 wickets
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூர் மைதானத்தில் டிசம்பர் 22 -டிசம்பர் 26 நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் போன்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 87 முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் வங்கதேச அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதனையடுத்து இன்று 4ம் நாள் தொடங்கிய நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் - அஸ்வின் ஜோடி நிதானமாக விளையாடி 73 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது
English Summary
IND vs BAN 2nd test india won by 3 wickets